தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; வெடிபொருட்கள் பறிமுதல் + "||" + NIA in 5 districts in Telangana Action test; Seizure of explosives

தெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; வெடிபொருட்கள் பறிமுதல்

தெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; வெடிபொருட்கள் பறிமுதல்
தெலுங்கானாவில் 5 மாவட்டங்களில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கடந்த பிப்ரவரியில் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது.  இதில், 400 மின்சார டெட்டனேட்டர்கள், 500 மின்சாரமில்லா டெட்டனேட்டர்கள் மற்றும் 400 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளின் பட்டியலை தயார் செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், 5 மாவட்டங்களில் 9 இடங்களில் உள்ள அவர்களது இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த சோதனையில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு மற்றும் எறிகுண்டு லாஞ்சர்கள் உற்பத்திக்கு பயன்பட கூடியவை என சந்தேகிக்கப்படும் உலோக தட்டுகள் மற்றும் துண்டுகள், இரும்பு குழாய்கள் மற்றும் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதேபோன்று பல்வேறு ஆவணங்கள் மற்றும் மின்சார டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டு உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
2. மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை; டாஸ்மாக் அதிகாரிகள் அதிரடி சோதனை 24 வழக்குகள் பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிகாரிகள் சோதனை
3. குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
குழந்தை தொழிலாளர்களை கண்டறிய கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
4. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
5. பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை
பாம்பன் தூக்குப்பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை