தேசிய செய்திகள்

மும்பையில் பலத்த மழை: ரெயில் சேவை பாதிப்பு + "||" + Mumbai receives 6.29 mm rainfall; IMD issues red alert for Mumbai Thane and Palghar

மும்பையில் பலத்த மழை: ரெயில் சேவை பாதிப்பு

மும்பையில் பலத்த மழை: ரெயில் சேவை பாதிப்பு
மும்பை, தானே மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.
மும்பை,

மும்பையில் பலத்த மழை காரணமாக நேற்று காலை 10.35 மணி முதல் 10.50 மணி வரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கல்வா- மும்ரா இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் மதியம் 3 மணி முதல் 3.35 மணி வரை மீண்டும் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதேபோல மழைக்காரணமாக நேற்று மின்சார ரெயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. குறிப்பாக சி.எஸ்.எம்.டி. பகுதியில் அதிகளவு ரெயில்கள் மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டன. இதனால் பைகுல்லாவில் இருந்து சி.எஸ்.எம்.டி. செல்ல மின்சார ரெயில்கள் சுமார் 30 நிமிடங்கள் எடுத்து கொண்டன. இதனால் மின்சார ரெயில் பயணிகள் அவதி அடைந்தனர்.

தானே ரெயில் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதேபோல கசாரா மலைப்பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டதாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தாவில் கனமழை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ள நீர்
கொல்கத்தாவில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.
2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. மும்பையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ‘நிர்பயா’ சிறப்பு போலீஸ் படை
பாலியல் குற்றங்களை தடுக்க மும்பையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ‘நிர்பயா’ சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட வேண்டும் என போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே உத்தரவிட்டுள்ளார்.
5. மும்பை உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்: சிவசேனா
கற்பழிப்பு சம்பவம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என சிவசேனா கூறியுள்ளது.