டெல்லியில் கனமழை; போக்குவரத்து நெருக்கடியால் வாகன இயக்கம் பாதிப்பு


டெல்லியில் கனமழை; போக்குவரத்து நெருக்கடியால் வாகன இயக்கம் பாதிப்பு
x
தினத்தந்தி 20 July 2021 2:14 PM GMT (Updated: 2021-07-20T19:44:31+05:30)

டெல்லியில் பெய்த கனமழையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது.  எனினும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழலில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கனமழையால், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.  ஒரே நேரத்தில் இரு சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் உள்ளிட்டவை ஒரே சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.  இதனால், வாகன இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது.
Next Story