கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு விகிதம்


கேரளாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு விகிதம்
x
தினத்தந்தி 20 July 2021 5:33 PM GMT (Updated: 2021-07-20T23:03:20+05:30)

கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரித்து 12 சதவீதத்திற்கு நெருங்கி உள்ளது.திருவனந்தபுரம்,

கேரளாவில் புதிதாக 16,848 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,87,716 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 10 சதவீதம் என இருந்த நோய் தொற்று விகிதம் 12 சதவீதம் அளவுக்கு நெருங்கியுள்ளது.

கொரோனாவுக்கு 104 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது.  12,052 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 30,45,310 பேர் குணமடைந்துள்ளனர்.  1,26,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,41,431 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு விகிதம் 11.91 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  இவர்களில், புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 783 பேருக்கு எவ்வாறு நோய் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.  கேரளாவில் கொரோனா பாதிப்புகளுடன், ஜிகா வைரஸ் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.


Next Story