ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிப்பு


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் முறியடிப்பு
x
தினத்தந்தி 20 July 2021 9:44 PM GMT (Updated: 2021-07-21T03:14:49+05:30)

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புற நகர் பகுதியில் 30 கிலோ வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் சதித்திட்டத்துடன் இந்த வெடிபொருட்கள் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான தங்புரா பந்த் என்ற இடத்தில்,  பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு  படை வட்டாரங்கள் கூறுகின்றன. பயங்கரவாதிகளின் மிகப்பெரிய தாக்குதல் திட்டமும் முறியடிக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படை தரப்பில் சொல்லப்படுகிறது. 


Next Story