மராட்டியம்; பால்கரில் லேசான நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவு


மராட்டியம்;  பால்கரில் லேசான நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் பதிவு
x
தினத்தந்தி 20 July 2021 10:15 PM GMT (Updated: 2021-07-21T03:45:40+05:30)

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பால்கர் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பால்கர், 

மும்பையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பால்கரில் சமீபகாலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பால்கர் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது பற்றி மாவட்ட பேரிடர் மீ்ட்பு படை அதிகாரி விவேகானந்த் கதம் கூறுகையில், பால்கரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவு கோலில் ஏற்பட்டதாகவும், இதனால் யாரும் காயமடையவில்லை எனவும், பொருட்கள் எதுவும் சேதம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.


Next Story