நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்தால் முதலில் தொடக்கப்பள்ளிகளை திறக்க வேண்டும்


நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்தால் முதலில் தொடக்கப்பள்ளிகளை திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 July 2021 3:27 AM GMT (Updated: 2021-07-21T08:57:44+05:30)

பள்ளிகளை திறக்க முடிவு செய்தால், முதலில் தொடக்கப்பள்ளிகளை திறக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் யோசனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமை இயக்குனர் பலராம் பார்கவா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வைரஸ் தொற்றை பெரியவர்களை விட குழந்தைகளால் சிறப்பாக கையாள முடியும். ஏனென்றால், வைரஸ் ஒட்டிக்கொள்ளும் உடல் உறுப்பு பகுதிகள், அவர்களுக்கு குறைவாக இருக்கின்றன.

மேலும், சமீபத்தில் நாங்கள் நடத்திய நாடுதழுவிய ஆய்வில் பெரியவர்களுக்கு சமமாக 6 முதல் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.

அதனால்தான், சில நாடுகளில் கொேரானாவின் 3 அலைகளிலும் தொடக்கப்பள்ளிகளை மட்டும் மூடவில்லை. எல்லா அலைகளிலும் தொடக்கப்பள்ளிகள் திறந்தே இருந்தன.

ஆகவே, இந்தியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதை பரிசீலித்தால், முதலில் தொடக்கப்பள்ளிகளை திறப்பதுபுத்திசாலித்தனமான செயலாக இருக்கும். அதே சமயத்தில், ஆசிரியர்கள், இதரஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story