திரிபுராவில் திரிணாமுல் காங்., தலைவர் கைது

திரிபுராவில் திரிணாமுல் காங்., தலைவர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 1:20 PM GMT (Updated: 2021-07-21T18:50:27+05:30)

திரிபுரா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஆசிஷ் லால் சின்ஹா ​​உட்பட பல தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

அகர்தாலா,

கடந்த 1993 ல் கொல்கட்டாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் காங்கிரஸ் ஆர்வலர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக திரிபுரா மாநில யூனகோட்டி மாவட்டத்தில் 
திரிபுரா திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஆசிஷ் லால் சின்ஹா ​​உட்பட பல தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். 

அப்போது, கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக கூடியதாக டி.எம்.சி.யின் உனகோட்டி மாவட்டத் தலைவர் அஞ்சன் சக்ரவர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர் என்று கைலாஷாஹர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் பார்த் முண்டா கூறினார். 

கைது செய்யப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story