உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உடல்நிலை கவலைக்கிடம்


உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உடல்நிலை கவலைக்கிடம்
x
தினத்தந்தி 21 July 2021 5:27 PM GMT (Updated: 21 July 2021 5:27 PM GMT)

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னருமான கல்யாண்சிங், கடந்த 4-ந் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நோய்த்தொற்று மற்றும் சுயநினைவு குறைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில், ‘‘20-ந் தேதி மாலையில் இருந்து கல்யாண்சிங்குக்கு உயிர் காக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சிறப்பு மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரி இயக்குனர் திமான், சிகிச்சை முறைகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story