தேசிய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை மையம் தகவல் + "||" + Depression in the Bay of Bengal - Indian Meteorological Department Information

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை மையம் தகவல்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும், வடமேற்கு, வடக்கு டெல்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.