தேசிய செய்திகள்

ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: எடியூரப்பா திட்டவட்டம் + "||" + Karnataka CM Yediyurappa hints at stepping down after July 26: ‘Will abide by high command decision’

ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: எடியூரப்பா திட்டவட்டம்

ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: எடியூரப்பா திட்டவட்டம்
ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் கட்சிக்கு அவமரியாதை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்து விதமான எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனிடையே முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து மடாதிபதிகள், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சோந்த எம்.பி.பாட்டீல், ஷாம்னூா் சிவசங்கரப்பா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் 2 ஆண்டுகள் நிறைவுக்கு பிறகு கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஜூலை 26-ம் தேதியுடன் கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன்பிறகு என்ன முடிவு என்பதை ஜே.பி.நட்டா முடிவு செய்வார். அதனை நான் பின்பற்றுவேன். பாஜகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்வதே எனது பணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சித் தொண்டர்கள், மடாதிபதிகள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பேனர் கலாச்சாரத்தை கைவிடுங்கள்: மீறினால் தலைமை நடவடிக்கை எடுக்கும் - ஆர்.எஸ்.பாரதி
பேனர் கலாச்சாரத்தை கைவிடுங்கள் என்றும் மீறினால் திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
2. கொரோனா: 4ல் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு; ஆராய்ச்சி முடிவு
கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் 4ல் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட கூடும் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
3. “சோனியா காந்தியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்” - பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர்சிங்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. இந்தியா மீது விதித்த பயண தடை நீக்கம்; ஜெர்மனி அரசு முடிவு
இந்தியா உள்பட 3 நாடுகள் மீது விதித்த பயண தடையை நீக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
5. வேளாண் சட்ட எதிர்ப்பு; நாடாளுமன்றம் வெளியே வரும் 22ந்தேதி முதல் போராட்டம் நடத்த முடிவு
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22ந்தேதி முதல் நாடாளுமன்றத்திற்கு வெளியே தினமும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.