மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சுதந்திரமான நீதித்துறை அவசியம்: சுப்ரீம் கோர்ட்டு


மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சுதந்திரமான நீதித்துறை அவசியம்: சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 22 July 2021 6:19 PM GMT (Updated: 2021-07-22T23:49:34+05:30)

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் தேவேந்திர சவுராசியா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. ராம்பாயின் கணவர் கோவிந்த் சிங்குக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.அப்போது நீதிபதிகள், ‘நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் சுதந்திரமான நீதித்துறை அவசியம். மாவட்ட நீதிபதிகளை பாதுகாக்க வேண்டும். அரசியல் 
நெருக்கடிகளில் இருந்து நீதித்துறையை பாதுகாக்க வேண்டும். வசதி படைத்த, அதிகாரம் மிக்கவர்களுக்கும், சாமானியர்களுக்கும் என இருவேறு நீதிமுறைகள் இருக்க முடியாது’ என கருத்து தெரிவித்தனர்.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் தேவேந்திர சவுராசியா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. ராம்பாயின் கணவர் கோவிந்த் சிங்குக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Next Story