ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு


ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
x
தினத்தந்தி 22 July 2021 6:45 PM GMT (Updated: 22 July 2021 6:45 PM GMT)

வக்கீல் அமித் சஹானி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஜி.எஸ்.டி. சட்டம் கடந்த ஜூலை 2017, ஜூலை 1-ம் தேதி தொடங்கி அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. சட்டத்தின் படி, ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி. சட்டம் அமலாகி 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தீர்ப்பாயம் உருவாக்கப்படவில்லை. இதுபோன்ற தீர்ப்பாயங்கள் உருவாக்கப்படாததால், வழக்கு தொடுப்பவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில்லை. இதனால் நாடு முழுவதும் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. மேலும் ஜி.எஸ்.டி. தொடர்பான மேல்முறையீடு மனுக்களும் ஏராளமாக நிலுவையில் உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடமும், ஜி.எஸ்.டி. கவுன்சிலிடமும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, ஜி.எஸ்.டி. தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story