தேசிய செய்திகள்

பீகார், ஜம்முவில் 2 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்; தாக்குதல் சதி முறியடிப்பு + "||" + NIA arrests two LeM terrorists from Bihar, Jammu

பீகார், ஜம்முவில் 2 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்; தாக்குதல் சதி முறியடிப்பு

பீகார், ஜம்முவில் 2 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்; தாக்குதல் சதி முறியடிப்பு
பீகாரை சேர்ந்த முகமது அர்மான் அலி (வயது 20), முகமது இஷானுல்லா (23) ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான லஷ்கர்-இ-முஸ்தபா அமைப்பில் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
இவர்கள் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டியிருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக ஜம்முவில் வழக்கு பதிவு செய்ததுடன், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இது குறித்து விசாரணையும் நடத்தி வந்தனர். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நேற்று இரு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். இதில் முகமது அர்மான் அலி பீகாரிலும், இஷானுல்லா ஜம்முவிலும் கைது செய்யப்பட்டனர்.

இதன் மூலம் காஷ்மீரில் நடத்த இருந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி...!
பீகார் மாநிலத்தை சேர்ந்த சிற்பி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார்.
2. பீகார்: மின்னல் தாக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
3. பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள நடிகை புகைப்படம்
பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில், பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
4. பீகாரில் மதரசாவில் குண்டுவெடிப்பு
பீகார் மாநிலம் மதரசாவில் குண்டுவெடிப்பு நடந்தது.
5. பீகாரில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு
பீகாரில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 8 வரை நீட்டித்து மாநில அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.