தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்; வெடி பொருட்கள் இருந்ததாக தகவல் + "||" + Drone with explosives shot down in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்; வெடி பொருட்கள் இருந்ததாக தகவல்

ஜம்மு காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்; வெடி பொருட்கள் இருந்ததாக தகவல்
ஜம்மு காஷ்மீரில் வெடி பொருட்களுடன் பறந்த ட்ரோன் ஒன்று சுட்டு விழ்த்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி பயங்கரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமானப்படை மற்றும் கடற்படைத்தளங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள கனச்சக் என்ற பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் பறந்து கொண்டிருந்த ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அந்த ட்ரோனில் இருந்து ஆபத்தான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.