நாடாளுமன்றம் செயல்படக்கூடாது என்பதுதான் ராகுல் காந்தியின் திட்டம்; பாஜக விமர்சனம்


ராஜ்யவர்தன் ரதோர்
x
ராஜ்யவர்தன் ரதோர்
தினத்தந்தி 23 July 2021 8:54 AM GMT (Updated: 23 July 2021 8:54 AM GMT)

தனது போன் ஓட்டுக்கேட்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறியது பொறுப்பற்றது என பாஜக விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

செல்போன் ஒட்டு கேட்க திட்டமிடப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், அவை நாள்தோறும் முடங்கி வருகிறது. 

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராகுல் காந்தி, தனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறினார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்துள்ள பாஜக, நாடாளுமன்றம்  செயல்படக்கூடாது என்பதுதான் ராகுல் காந்தியின் திட்டம் என்று தெரிவித்துள்ளது. 

இது குறித்து பாஜகவைச்சேர்ந்த ராஜ்யவர்தன் ரதோர் கூறுகையில், “ தனது போன் ஓட்டுக்கேட்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறியது பொறுப்பற்றது.  நாடாளுமன்றம் செயல்படக்கூடாது என்பதுதான் ராகுல் காந்தியின் திட்டம். தேசத்தின் வளர்ச்சியை அவர் நம்பவில்லை. தனது போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ராகுல் காந்தி கருதினால், அவர் விசாரணையை கோரலாம்” என்றார்


Next Story