கொரோனா 3 வது அலை நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய மந்திரி தகவல்


கொரோனா 3 வது அலை நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 23 July 2021 9:38 AM GMT (Updated: 23 July 2021 9:38 AM GMT)

கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில் ‘பெகாசஸ்’ விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது.

 இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுப் வருவதால் கடந்த 3 நாட்களாக மக்களவை முடங்கியது. 4ம் நாளான இன்றும் ‘பெகாசஸ்’ விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்  மேற்பார்வையின்  கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக  அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய மந்திரி  தகவல் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பிரவீன் பாரதி பதில் அளித்துள்ளார்.

Next Story