ஒலிம்பிக் தொடக்க விழாவில் வீரர்கள் இந்திய கொடியை ஏந்தி சென்ற போது....எழுந்து நின்ற பிரதமர் மோடி!


ஒலிம்பிக் தொடக்க விழாவில் வீரர்கள் இந்திய கொடியை ஏந்தி சென்ற போது....எழுந்து நின்ற பிரதமர் மோடி!
x
தினத்தந்தி 23 July 2021 2:53 PM GMT (Updated: 2021-07-23T20:23:37+05:30)

இந்தியா சார்பில் மன்பிரீத் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி தேசிய கொடியை ஏந்தி சென்றது.

டோக்கியோ,

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி இன்று டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. 

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும். கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கியது.  மேடைக்கு ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் வருகை தந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க்கவிழாவில்  சிறப்பு விருந்தினராக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன்,  பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலிலில் ஜப்பானின் தேசிய கீதம் படப்பட்டது.  இது ஜப்பானின் தற்காப்பு கலைஞர்கள் பாடினார்கள். 

விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுன் மிடுக்காக அணிவகுத்து செல்ல தொடங்கினர். அணி வகுப்பில் ஜப்பானிய தேசியக் கொடி முதலில்  கொண்டு வரப்பட்டது. 

ஒலிம்பிக் தொடக்க விழா வீரர்கள் அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு சென்றது. அந்த நாட்டின் சார்பில் மொத்தம் 83 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.அதை தொடர்ந்து ஒலிம்பிக் அகதிகள் குழு சென்றது. 

அவர்களைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, அயர்லாந்து,அஜர்பைஜான் அணிகள் சென்றன.தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி சென்றறது, அவர்களில் ஒரே பெண் விளையாட்டு வீரர் கொடி ஏந்தி  சென்றார்.தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அல்ஜீரிய அணிகள் சென்றன.

அங்கோலோ, ஆப்பிரிக்கா,ஆன்டிகுவா மற்றும் பார்புடாவை அடுத்து இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அணியான அன்டோரா சென்றது. அடுத்து ஏமனின் குழுவினர் சென்றனர்.

தொடர்ந்து இஸ்ரேல், இத்தாலி. ஈரான், அணிகள் சென்றன. தொடர்ந்து இந்தியா சார்பில் மன்பிரீத் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோர் தலைமையிலான இந்திய அணி தேசிய கொடியை ஏந்தி சென்றது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை தொலைகாட்சியில் கண்டுகளித்த பிரதமர் மோடி,  ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்கள் நமது தேசிய கொடியை ஏந்தி சென்ற போது பிரதமர் மோடி எழுந்து நின்றார். வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கைதட்டி உற்சாகப்படுத்தினார்.


Next Story