தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் ரூ.25 கோடியில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக தகவல் + "||" + Tirupati temple to use Rs 25 crore drone blocking technology

திருப்பதி கோவிலில் ரூ.25 கோடியில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக தகவல்

திருப்பதி கோவிலில் ரூ.25 கோடியில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலை பாதுகாக்க ரூ.25 கோடியில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி,

ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் கடந்த மாதம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் முக்கிய இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக டிரோன் தடுப்பு தொழில்நுட்பம் குறித்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்முறை விளக்கத்துக்கு கடந்த 6-ந்தேதி ஏற்பாடு செய்திருந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி பங்ேகற்றார்.

அப்போது ஒரு டிரோன் தடுப்பு தொழில்நுட்ப ஜாமர் கருவி அமைப்பை உருவாக்க ரூ.25 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்தநிலையில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலை பாதுகாக்க ரூ.25 கோடி செலவில் டிரோன் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி கோவிலில் ஸ்ரேயா சாமி தரிசனம்
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக மழை படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
2. திருப்பதி கோவிலில் 19 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் - தேவஸ்தானம் தகவல்
திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் 19 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
3. திருப்பதி கோவில்களில் இன்று யுகாதி பண்டிகை விழா
திருப்பதி கோவில்களில் இன்று யுகாதி பண்டிகை விழா கொண்டாடப்படுகிறது.