முதல் பதக்கம் : மீராபாய் சானுவுக்கு குவியும் வாழ்த்துகள்


Image courtesy : GETTY IMAGES
x
Image courtesy : GETTY IMAGES
தினத்தந்தி 24 July 2021 7:47 AM GMT (Updated: 2021-07-24T13:17:18+05:30)

இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்த மீராபாய் சானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

புதுடெல்லி

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய் சானுவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும்  பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மீராபாய் சானுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மீராபாய்_சானு தனது சிறந்த திறமையால் பளுதூக்குதலில் இந்தியாவுக்கான  முதல் ஒலிம்பிக் வெள்ள பதக்கத்தை கொண்டு வந்தவர் என கூறி உள்ளார்.

மேலும் இந்திய பிரபலங்கள் , கிரிக்கெட் பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story