தேசிய செய்திகள்

பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை வரும் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறப்பு + "||" + Presidential Palace will reopen on August 1 for public viewing

பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை வரும் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறப்பு

பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை வரும் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறப்பு
ஜனாதிபதி மாளிகையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் பொதுமக்கள் பார்வைக்காக ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக விளங்கி வருகிறது. மொத்தம் 340 அறைகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் 14 முதல்  பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  

டெல்லியில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்காக வரும் ஆகஸ்ட் 1 முதல் ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் மீண்டும் திறக்கப்படுகின்றன.

காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட மூன்று நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 25 பேர் என சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறைகள் தவிர்த்து) ஜனாதிபதி மாளிகை சுற்றுலா அனுமதிக்கப்படும்.

செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில் (அரசு விடுமுறைகள் தவிர்த்து), காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட நான்கு நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 50 பேருக்கு ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகம் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஆகஸ்டு 1-ந்தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதி
ஜனாதிபதி மாளிகை மற்றும் அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் இருந்து இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.
3. டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி
சென்னையில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
4. அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அரசு வழங்கிய வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
5. கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை; விழிப்புடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவை வெல்ல வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.