தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காஷ்மீர் செல்கிறார் + "||" + President Ramnath Govind is leaving for Kashmir tomorrow

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காஷ்மீர் செல்கிறார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காஷ்மீர் செல்கிறார்
பாகிஸ்தான் நாட்டுடனான கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.
புதுடெல்லி,

பாகிஸ்தான் நாட்டுடனான கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார்.

22ஆவது கார்கில் வீரர்கள் நினைவு தினத்தையொட்டி ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜனாதிபதி மரியாதை செலுத்த உள்ளார். மேலும் லடாக்கில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27-ந் தேதி, மாதா வைஷ்ணோ தேவி குகைக்கோவிலுக்கு அவர் செல்வார் என்று தெரிகிறது. அதே நாளில் அவர் டெல்லி திரும்புகிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கீழ்நிலை பணியாளர்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலத்தின் பொன்விழாவையொட்டி இமாசலபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
இமாசலபிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.
2. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.
3. கொரோனா தொற்று முடிவடையவில்லை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி வலியுறுத்தல்
கொரோனா பெருந்தொற்று முடிவடையாததால் நாட்டு மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
4. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றவுள்ளார்.
5. 75-வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.