மராட்டியத்தில் ஜேஇஇ தேர்வர்களுக்கு சலுகை


மராட்டியத்தில் ஜேஇஇ தேர்வர்களுக்கு சலுகை
x
தினத்தந்தி 24 July 2021 2:37 PM GMT (Updated: 2021-07-24T20:07:33+05:30)

மராட்டியத்தில் கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஜேஇஇ தேர்வர்களுக்கு சலுகை வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய மாநில வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் மலைப்பகுதி கிராமங்களில் நிலச்சரிவு நேரிட்டுள்ளது. 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்னைப் படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மராட்டியத்தில் கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஜேஇஇ தேர்வர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்றும்  பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு பிரதான தேர்வெழுத மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை மந்திரி பிரதான் தெரிவித்துளார்.


Next Story