தேசிய செய்திகள்

வரி செலுத்துவோருக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு + "||" + Honest taxpayers deserve to be admitted by paying the tax amount: Nirmala Sitharaman

வரி செலுத்துவோருக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

வரி செலுத்துவோருக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 161-வது வருமான வரி தினத்தையொட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நேர்மையாக வரி செலுத்துவோர், நாட்டின் முன்னேற்றத்துக்கு கடமை உணர்வோடு தங்கள் பங்கு வரிகளை செலுத்துகிறார்கள். இதற்காக அவர்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்தவர்கள். வருமான வரி நடைமுறைகளையும், செயல்முறைகளையும் எளிமைப்படுத்துவதற்கு வருமான வரித்துறையினர் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். வருமான வரித்துறை செயல்பாடுகளை தொந்தரவு இல்லாததாகவும், நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும் ஆக்குகின்றனர்” என பாராட்டி உள்ளார்.

இதேபோன்று நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி, வருவாய் செயலாளர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் மோகபத்ரா ஆகியோரும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து - நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2. மத்திய பெண் மந்திரிகளுக்கு தேநீர் விருந்து அளித்த நிர்மலா சீதாராமன்
மத்திய மந்திரி சபை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
3. ‘கோவின்’ தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
‘கோவின்’ தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
4. மத்திய நிதி மந்திரி தலைமையில் இன்று 43-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
8 மாதங்களுக்கு பின்னர் முதல்முறையாக இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது.