தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Encounter underway in Munand area of Kulgam. Police and security forces at the spot. Details awaited: J&K Police

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள முனாந் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. அப்பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. சையது அலி ஷா கிலானி உடல் மீது பாக். கொடி போர்த்தப்பட்டதால் சர்ச்சை; போலீசார் வழக்குப்பதிவு
காஷ்மீர் பிரிவினைவாத அரசியலின் முகமாக இருந்தவரும் மூத்த தலைவருமான சையது அலி ஷா கிலானி, புதன்கிழமை தனது 92 வயதில் காலமானார்.
2. ஜம்மு காஷ்மீர்; குப்கார் கூட்டமைப்பு தலைவர்கள் நாளை ஆலோசனை
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி நாளை கூடுகிறது.
3. ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்; பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
4. ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
5. ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.