இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 July 2021 4:26 AM GMT (Updated: 2021-07-25T09:56:15+05:30)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,742- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 39,972-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 535- பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 08 ஆயிரத்து 212- ஆக உள்ளது.  

Next Story