வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக குற்றச்சாட்டு; தெலுங்கு தேசம் எம்.பிக்கு 6 மாதம் சிறை தண்டனை


வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக குற்றச்சாட்டு; தெலுங்கு தேசம் எம்.பிக்கு 6 மாதம் சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 July 2021 5:54 AM GMT (Updated: 2021-07-25T11:24:13+05:30)

வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டில் தெலுங்கு தேசம் எம்.பிக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐதராபாத்,

கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எம்.பி மாலோத் கவிதாவின் உதவியாளருக்கும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.  அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ஜாமீன் வழங்கி உள்ளது.


Next Story