தேசிய செய்திகள்

கோவாவில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு + "||" + The government of Goa has extended the statewide curfew order up to 7am, August 2nd: Goa Chief Minister Pramod Sawant

கோவாவில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோவாவில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கோவாவில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பானஜி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், கோவாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள ஊரடங்கை ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,70,491ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,158 - ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கோவாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணம்
கோவாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 5-ந்தேதி முதல் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
2. கோவாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை: கோவா சுகாதார மந்திரி
கோவா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 மணி நேரத்துக்குள் 26 கொரோனா நோயாளிகள் இறந்து விட்டதாக கடந்த மே 11-ந்தேதி மாநில சுகாதார மந்திரி விஷ்வஜித் ராணே கூறியிருந்தார்.
3. கோவாவில் இன்று 241 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கோவாவில் தற்போது 1,848 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கோவாவில் வரும் 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கோவாவில் வரும் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,504 பேருக்கு கொரோனா
கோவாவில் தற்போது 15,699 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.