கேரளாவில் கனமழை தொடரும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 25 July 2021 6:58 PM GMT (Updated: 2021-07-26T00:28:51+05:30)

கேரளாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்பின் 2வது அலை, ஜிகா வைரசின் பாதிப்பு என அடுத்தடுத்து மக்கள் அல்லல்பட்டு வரும் சூழலில், பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.  இதேபோன்று கேரளாவில், இன்றும் (திங்கட்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இவற்றில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பலத்த மழை பெய்தது.

இதனை தொடர்ந்து, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எா்ணாகுளம், கண்ணூா், காசா்கோடு மாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story