கோழி கழிவுகளில் இருந்து டீசல் உற்பத்தி; கேரள கால்நடை மருத்துவரின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம்


கோழி கழிவுகளில் இருந்து டீசல் உற்பத்தி; கேரள கால்நடை மருத்துவரின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம்
x
தினத்தந்தி 25 July 2021 7:57 PM GMT (Updated: 25 July 2021 7:57 PM GMT)

கேரளாவின் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவுக்கு அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜான் ஆபிரகாம்.

இவர் கோழி கழிவுகள் மற்றும் இறந்த பறவைகளில் இருந்து பயோடீசலை உருவாக்கி உள்ளார். நாமக்கல்லில் உள்ள தமிழக அரசின் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2009-12-ம் ஆண்டு காலகட்டத்தில் ேமற்கொண்ட ஆய்வுப்படிப்பின்போது இந்த ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டார்.2014-ம் ஆண்டு இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்த அவர் இதற்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்து இருந்தார். அதை ஆய்வு செய்த இந்திய காப்புரிமை அலுவலகம் தற்போது அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து காப்புரிமை வழங்கி இருக்கிறது.

சுமார் 7½ ஆண்டுகால நீண்ட போராட்டத்துக்குப்பின் இந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கும் ஜான் ஆபிரகாம், இந்த டீசலில் இயங்கும் வாகனங்களால் காற்று மாசுபாடு மிகவும் குறையும் என தெரிவித்து உள்ளார். இவர் தயாரித்த ஒரு லிட்டர் பயோடீசல் 38 கி.மீ. வரை மைலேஜ் அளிப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதைய டீசல் விலையில் 40 சதவீத செலவிலேயே இந்த டீசலை வழங்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இவரது கண்டுபிடிப்பை கொச்சியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் அங்கீகரித்து தர சான்றிதழ் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story