தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மாநகராட்சி கமிஷனர் வீடு முன் குப்பை கொட்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. + "||" + BJP throws rubbish in front of Corporation Commissioner's house in Karnataka MLA

கர்நாடகாவில் மாநகராட்சி கமிஷனர் வீடு முன் குப்பை கொட்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.

கர்நாடகாவில் மாநகராட்சி கமிஷனர் வீடு முன் குப்பை கொட்டிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.
கர்நாடகாவில் மாநகராட்சி கமிஷனர் வீடு முன் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குப்பை கொட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பெலகாவி,

கர்நாடகாவின் பெலகாவி நகரில், பல்வேறு சாலைகளில் குப்பை குவிந்துள்ளது.  இதனை அள்ளி சுத்தம் செய்யவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் பற்றி அறிந்த பெலகாவி தெற்கு தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அபய் பாட்டீல், டிராக்டரில் குப்பையை நிரப்பி, தானே ஓட்டி வந்துள்ளார்.  இதன்பின் விஸ்வேஸ்வரய்யா நகரில் உள்ள, பெலகாவி மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் வீட்டு முன் குப்பையை கொட்டினார்.  குப்பையை சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுபற்றி அபய் பாட்டீல் கூறும்போது, குப்பையை அள்ளி சுத்தம் செய்யுங்கள் என 3 மாதங்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே, குப்பையை கமிஷனர் வீடு முன் கொட்டினேன்.

வரும் நாட்களில், இதேபோன்று குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்த முன் வராவிட்டால், மாவட்ட கலெக்டர் வீடு முன் குப்பையை கொட்டுவேன் என ஆவேசமுடன் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சாமி கும்பிட சென்றபோது விபரீதம்; கல்லூரி மாணவி விபத்தில் பலி
திருப்பூரில் பல்லடம் அருகே, ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியாகி உள்ளார்.
2. துருக்கியில் தீ விபத்து; 4 வெளிநாட்டு குழந்தைகள் பலி
துருக்கியில் 5 அடுக்கு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வெளிநாட்டு குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
3. கடலூரில் அதிர்ச்சி; திடீரென இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம்
கடலூரில் பள்ளி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
4. வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம், 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் மற்றும் 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
5. திருவண்ணாமலை: ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம்; சிறுமி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.