உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி


உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்:  மத்திய மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 26 July 2021 1:25 AM GMT (Updated: 2021-07-26T06:55:19+05:30)

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 350க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என மத்திய இணை மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி மத்திய உள்விவகார இணை மந்திரி அஜய் மிஷ்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, நடப்பு அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 350க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரும் என கூறியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், பா.ஜ.க. 325 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.


Next Story