வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல் காந்தி


வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல் காந்தி
x
தினத்தந்தி 26 July 2021 5:37 AM GMT (Updated: 26 July 2021 5:37 AM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி டிராக்டரில் வருகை தந்தார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மத்திய அரசுடன் நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்கவில்லை.

இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி கவர்னர் அனில் பைஜால் அனுமதி அளித்தார். இதன்படில் ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். 


Next Story