கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடக  முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 26 July 2021 6:41 AM GMT (Updated: 26 July 2021 6:41 AM GMT)

கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜனதாவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.

ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பா.ஜனதா மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். 

அதன்படி எடியூரப்ப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு ஆன நிலையில், முதல் மந்திரி பொறுப்பில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். 

Next Story