தேசிய செய்திகள்

5 நாள் பயணமாக டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி; மோடி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார் + "||" + Mamata leaves for Delhi on 5-day visit; will meet PM, opposition leaders

5 நாள் பயணமாக டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி; மோடி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார்

5 நாள் பயணமாக டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி; மோடி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார்
மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
டெல்லி பயணம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். மேற்குவங்காள சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று, முதல்-மந்திரியாக பதவி ஏற்ற அவர், டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியையும், ஜனாதிபதியையும் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மாநில மந்திரி சபை கூட்டம் முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மம்தா பானர்ஜி, விமானம் மூலம் டெல்லி சென்றார்.

மோடியுடன் சந்திப்பு
5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளார். அப்போது மோடியிடம் மாநில வளர்ச்சி குறித்து அவர் ஆலோசிப்பார் என்று தெரிகிறது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் அங்கும் மம்தா பானர்ஜி செல்ல இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் மம்தாவின் டெல்லி பயணத்தை விமர்சனம் செய்துள்ள மேற்குவங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ், ‘தடுப்பூசி தட்டுப்பாடு, தேர்தல் வன்முறை என பல பிரச்சினைகளில் இருந்து சற்று விடைபெறுவதற்காகவும், பிரதமரிடம் அதிக நிதி ஒதுக்க கோரிக்கை விடுக்கவும் டெல்லி சென்றுள்ளார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் பலன் அளிக்கப்போவதில்லை’ என்று கூறியுள்ளார். கடந்த தேர்தலில் (2019) பல தலைவர்களை கொல்கத்தாவுக்கு அழைத்து பிரசாரம் செய்தார். ஆனால் பெரும்பான்மையுடன் மோடி ஆட்சி அமைத்ததாக திலீப் கோஷ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது...!
டெல்லி பூ மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த வெடிகுண்டு பை கண்டுபிடிக்கப்பட்டதை அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
2. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் புதிதாக 21,259 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கவலை வேண்டாம், ஊரடங்கு கிடையாது; டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 25 சதவீதத்தை தாண்டி அதிர வைத்துள்ளது.
5. டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவு: ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்
டெல்லியில் தனியார் அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.