தேசிய செய்திகள்

காந்தி குடும்ப அடிமைகளுக்கு ஜனநாயகம் பற்றி பேச தார்மீக உரிமை உள்ளதா? கர்நாடக பா.ஜனதா பதிலடி + "||" + Do Gandhi family slaves have a moral right to talk about democracy? Karnataka BJP

காந்தி குடும்ப அடிமைகளுக்கு ஜனநாயகம் பற்றி பேச தார்மீக உரிமை உள்ளதா? கர்நாடக பா.ஜனதா பதிலடி

காந்தி குடும்ப அடிமைகளுக்கு ஜனநாயகம் பற்றி பேச தார்மீக உரிமை உள்ளதா? கர்நாடக பா.ஜனதா பதிலடி
காந்தி குடும்ப அடிமைகளுக்கு ஜனநாயகம் பற்றி பேச தார்மீக உரிமை உள்ளதா?. என்று கர்நாடக பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.
எடியூரப்பா பீஷ்மன்

கர்நாடக பா.ஜனதா டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்து உள்ளார். இதனை பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் முயற்சி செய்கிறது. எடியூரப்பா மாநில பா.ஜனதாவின் பீஷ்மன். கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக அவர் உழைத்தார். அவர் கட்சியின் ஒழுக்கம், கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர். அவர் ராஜினாமா முடிவை கட்சியின் சித்தாந்தத்திற்கு உட்பட்டு அறிவித்து உள்ளார். அவரது ராஜினாமாவை காங்கிரஸ் விமர்சித்து உள்ளது. காந்தி குடும்ப அடிமைகளின் பேச்சை கேட்கும் நிலையில் பா.ஜனதா இல்லை. சித்தராமையாவை போன்ற ஊழல் நிறைந்த முதல்-மந்திரியை கர்நாடகம் பார்த்தது இல்லை. காந்தி குடும்ப அடிமைகளுக்கு ஜனநாயகம் பற்றி பேச தார்மீக உரிமை உள்ளதா?. பா.ஜனதாவில் தலைவர்கள் பற்றாக்குறை இல்லை. இதனால் தான் எடியூரப்பா தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்து உள்ளார். சோனியா காந்தி நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவராக உள்ளார். இதன்மூலம் அவர் உலக சாதனை படைத்து உள்ளார். முதலில் காங்கிரஸ் அவர்களது கட்சிக்கு தலைவரை நியமிக்க வேண்டும்.

கண்ணீருக்கு வித்தியாசம்
சுர்ஜேவாலா மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப்பில் என்ன நடக்கிறது. தந்தை இறந்த தினத்தன்று மந்திரியாக பதவி ஏற்று அதிகார தாகத்தை தீர்த்த கொண்டவர் டி.கே.சிவக்குமார். மூத்த தலைவர்களை புறக்கணிப்பது காங்கிரஸ் கட்சியின் பிறப்புரிமை. எடியூரப்பா கண்ணீர் விட்டது பற்றி விமர்சித்து உள்ளீர்கள். ஆனந்த கண்ணீரும், உண்மையான கண்ணீருக்கும் வித்தியாசம் உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர்களின் பட்டியலை இறுதி செய்ய முடியாத தலைவர்கள் பா.ஜனதாவின் உள்விவகாரங்கள் குறித்து பேசுவதை நிறுத்த வேண்டும். எடியூரப்பாவுக்கு ஆதரவாக பேசுவது போல முதலை கண்ணீர் சிந்தும் காங்கிரஸ் தலைவர்கள் முன்பு எடியூரப்பா பற்றி பேசியதை நினைவுபடுத்த வேண்டுமா?.பா.ஜனதாவில் நிலவும் அரசியல் பிரச்சினைகள் குறித்து காங்கிரசார் பேச வேண்டாம். முதலில் அவர்களது வீட்டில் நிலவும் பிரச்சினையை சரிசெய்யட்டும். சித்தராமையாவுடன், ராகுல் காந்தி ரகசியமாக பேசியது என்ன?

இவ்வாறு பா.ஜனதா கூறியுள்ளது.