தேசிய செய்திகள்

டெல்லியில் செய்ததுபோல் லக்னோ செல்லும் சாலைகளையும் முடக்குவோம் - விவசாய சங்கம் எச்சரிக்கை + "||" + We will block roads to Lucknow as we did in Delhi - Agriculture Association warns

டெல்லியில் செய்ததுபோல் லக்னோ செல்லும் சாலைகளையும் முடக்குவோம் - விவசாய சங்கம் எச்சரிக்கை

டெல்லியில் செய்ததுபோல் லக்னோ செல்லும் சாலைகளையும் முடக்குவோம் - விவசாய சங்கம் எச்சரிக்கை
டெல்லியில் செய்ததுபோல் லக்னோ செல்லும் சாலைகளையும் முடக்குவோம் என விவசாய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லக்னோ,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லி எல்லைகளில் முகாமிட்டு 8 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதில், டெல்லி-உத்தரபிரதேச எல்லையான காஜிப்பூரில் போராட்டம் நடத்திவரும் பாரதீய கிசான் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது. டெல்லியை போல், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவையும் மாற்றுவோம். அதாவது, லக்னோவுக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் முடக்குவோம்.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்பு, அம்மாநிலங்களில் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் ெதாடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.