நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கவில்லை; விவாதத்திலும் ஆர்வம் காட்டவில்லை - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 27 July 2021 5:58 AM GMT (Updated: 27 July 2021 5:58 AM GMT)

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கவில்லை விவாதத்திலும் ஆர்வம் காட்டவில்லை என பிரதமர் மோடி காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டினார்.


புதுடெல்லி

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தின. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போர்க்கோலம் பூண்டு உள்ளன.

ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரசும் , பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன. இது புனையப்பட்ட கதை, ஆதாரம் இல்லை என அவை கூறுகின்றன. ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன.

இந்த நிலையில் பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி  பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பிற பா.ஜ.க எம்.பி.க்கள்., தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றக்  பா.ஜ.க கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்தியதாக காங்கிரசை குற்றம்சாட்டினார்.  காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற விவாதத்தில் ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கவில்லை.  தடுப்பூசி பிரச்சினை குறித்து கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திலும்  காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை என கூறினார்.

மேலும் அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களையும் ஆகஸ்ட் 15 க்குப் பிறகு தங்கள் பகுதிக்குச் சென்று மக்களிடம் உண்மையைச் சொல்லுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story