கர்நாடக புதிய முதல் மந்திரி யார்? இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை


கர்நாடக புதிய முதல் மந்திரி யார்?  இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை
x
தினத்தந்தி 27 July 2021 7:29 AM GMT (Updated: 2021-07-27T12:59:18+05:30)

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழா மேடையிலேயே கண்ணீர் சிந்தியபடி இதனை அவர் அறிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து எடியூரப்பா நேற்று பதவி விலகினார். எடியூரப்பா பதவி விலகியதால் அம்மாநிலத்தின் அடுத்த முதல் மந்திரியாக யார் பதவி ஏற்க உள்ளனர் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

 ஆளும் கட்சியான பாஜக இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திற்காக பாஜக மேலிட  பொறுப்பாளர்களான மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இன்று கர்நாடக வருகை தருகின்றனர்.

 பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அடுத்த முதல் மந்திரி யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது. 


Next Story