தேசிய செய்திகள்

ஆபாச பட வழக்கில் கைதான ராஜ்குந்த்ரா 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு + "||" + Raj Kundra sent to judicial custody for 14 days in porn case

ஆபாச பட வழக்கில் கைதான ராஜ்குந்த்ரா 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

ஆபாச பட வழக்கில் கைதான ராஜ்குந்த்ரா 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
ஆபாச பட வழக்கில் கைதான நடிகை ஷில்பா ஷெட்டியில் கணவர் ராஜ்குந்த்ராவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது.
மும்பை,

மும்பை மலாடு, மத் ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் ஆபாச படம் எடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் நடிகை வந்தனா திவாரியையும் கைது செய்து இருந்தனர்.  

விசாரணையில் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ராவுக்கு (வயது45) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரை கடந்த 19-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர். 

அவர் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். 27 ஆம் தேதி வரை காவலில் எடுத்த போலீசார்  ராஜ்குந்த்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  போலீஸ் காவல் முடிந்த நிலையில்,  ராஜ்குந்த்ராவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ராஜ்குந்த்ராவுடன் தொடர்பு; ஆபாச பட வழக்கில் சிக்கும் நடிகைகள்
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றி பணம் சம்பாதித்த புகாரில் ராஜ்குந்த்ரா கைதானது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்த நடிகைகளையும், தொழில் ரீதியாக அவருடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகளையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து சம்மன் அனுப்பி வருகிறார்கள். அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.