தேசிய செய்திகள்

மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான 1,450 ஏக்கர் நிலத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது: சுப்ரீம் கோர்ட்டு + "||" + Supreme Court nixes Karnataka's plea against HC order on land belonging to Maharaja of Mysore

மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான 1,450 ஏக்கர் நிலத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது: சுப்ரீம் கோர்ட்டு

மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான 1,450 ஏக்கர் நிலத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது: சுப்ரீம் கோர்ட்டு
மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான 1,450 ஏக்கர் நிலத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
1,450 ஏக்கர் நிலம்
மைசூரு மாவட்டம் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள குருபாரஹள்ளி, ஆலனஹள்ளி, சவுடஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1,450 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சொந்தம் கொண்டாடினர். இதுபற்றி அறிந்த மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி சிந்தூரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனியாரால் ஆக்கிரமிக்கபட்டு உள்ள 1,450 ஏக்கர் நிலம் மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், அதை மாநில அரசு எடுத்துக்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்திய கர்நாடக ஐகோர்ட்டு மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான அந்த சொத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு உடனே அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் கூறி உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
இதை எதிர்த்து நில ஆக்கிரமிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் அந்த நிலத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று கோரி அப்போதைய மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவர் இவ்வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

அதாவது மைசூரு அரச குடும்பத்துக்கு சொந்தமான அந்த நிலத்தை யாரும் உரிமை கொண்டாடக்கூடாது என்று கூறி தீர்ப்பளித்தார். இதன்மூலம் அந்த 1,450 ஏக்கர் நிலமும் அரசு குடும்பத்துக்கு சொந்தமான என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மைசூரு அரச குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்!
பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்.
2. ரேக்ளா பந்தயம் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
ரேக்ளா பந்தயத்திற்கு உரிய விதிகளை பின்பற்றி நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
3. ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
4. லகிம்பூர் சம்பவம்: போலீஸ் விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
லகிம்பூர் வன்முறை சம்பவம் குறித்து உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
5. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
முல்லைப்பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரைத் தேக்கி வைக்கலாம் என்பது குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்புக்குழு ஓரிரு நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.