தேசிய செய்திகள்

கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் பி.எம்.கேர்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு + "||" + Children orphaned during Covid-19 should be covered under welfare schemes: Supreme court

கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் பி.எம்.கேர்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் பி.எம்.கேர்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் பி.எம்.கேர்ஸ் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
தாமாக முன்வந்து வழக்கு
நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.இதில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் ஆஜராகி, கொரோனாவால் தாய்-தந்தையை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும், ஒரு பெற்றோரை அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கும் பி.எம். கேர்ஸ் நிதித் திட்டம் செயல்படுத்தப்படும் என வாதிட்டார்.

அனைத்து குழந்தைகளுக்கும்...
அப்போது நீதிபதிகள், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் பி.எம்.கேர்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என வாய்மொழியாக தெரிவித்தனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகள் வருமாறு:-
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை ‘பால் ஸ்வராஜ்' இணையதளத்தில் மாவட்ட கலெக்டர்கள் தொடர்ந்து பதிவேற்ற வேண்டும்.

உரிய உதவிகளை அளிக்க வேண்டும்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து உரிய உதவிகளை குழந்தைகள் நலக்குழு அளித்திட வேண்டும்.2020-ம் ஆண்டு மார்ச்சுக்கு பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, மாநில அரசுகளின் திட்டங்களால் பயனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை குறித்த நிலை அறிக்கையை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தாக்கல் செய்ய வேண்டும்.

உறுதி செய்ய வேண்டும்
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களையும் மாநிலங்கள் தாக்கல் செய்ய வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகள் தற்போது பயிலும் பள்ளியிலேயே குறைந்தபட்சம் நடப்பாண்டில் தொடர்ந்து கல்வி பெறுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

பிரமாண பத்திரம்
பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்க வைப்பவதில் சிக்கல் இருந்தால், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்ய வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்த்தது தொடர்பாக மாநில அரசுகள் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 3 வாரங்கள் கழித்து நடைபெறும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 254 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. பெரம்பலூரில் 71 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. அரியலூரில் 73 பேருக்கு கொரோனா
அரியலூரில் 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
5. கடந்த 2 நாட்களில் துணை சூப்பிரண்டு உள்பட 33 போலீசாருக்கு தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 33 போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதால் காவல்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.