தேசிய செய்திகள்

விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள்: வேளாண் மந்திரி + "||" + If you’re concerned about farmers, allow Lok Sabha to function: Tomar tells Opposition

விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள்: வேளாண் மந்திரி

விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தை செயல்பட விடுங்கள்: வேளாண் மந்திரி
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, விவசாயிகள் காப்பீட்டு திட்டம் தொடர்பான ஒரு துணை கேள்விக்கு மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் அளித்தார்.
அப்போது, ‘பெகாசஸ்’ உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அதை சுட்டிக்காட்டி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-

விவசாயிகள் தொடர்பான 15 கேள்விகள் இருக்கின்றன. விவசாயிகள் மீது எதிர்க்கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், சபையை செயல்பட விடவேண்டும். அரசு என்ன சொல்கிறது என்று கவனிக்க வேண்டும். அமளிகளால் சபையின் கண்ணியம் குறைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.