வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும்; மத்திய அரசு + "||" + 15 crore corona vaccines will be available by next August; Central government
வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும்; மத்திய அரசு
வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசு உயரதிகாரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினரான மருத்துவர் வி.கே. பால் செய்தியாளர்களிடம் கூறும்போது, வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசிகள் வினியோகம் செய்யும் அளவுக்கு உள்ளது. இதுபற்றிய சரியான எண்ணிக்கை பின்னர் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகள் கொரோனா பாதிப்புக்கான இடங்களாக என குறிப்பிட்ட பால், தேவையில்லாமல் இதுபோன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதிக கூட்ட நெருக்கடியை தவிர்க்க வேண்டும் என்றும், கூட்டம் கூடுவதற்கோ மற்றும் பெரிய அளவிலான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கான நேரமோ இதுவல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.