தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம் + "||" + Madhya Pradesh: A tragedy in which a person was burnt to death by a samosa

மத்திய பிரதேசம்: சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்

மத்திய பிரதேசம்:  சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்
மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்வால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ச்சியாக ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம் ஏற்பட்டு உள்ளது.அனுப்பூர்,

மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் நகரில் அமர்கந்தக் என்ற பகுதியில் பஜ்ரு ஜெய்ஸ்வால் என்பவர் தனது 2 நண்பர்களுடன் சமோசா வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

அந்த கடைக்காரர் பணவீக்கத்தினால் சமோசாவின் விலை உயர்ந்து விட்டது என கடைக்காரர் கஞ்சன் சாகு கூறியுள்ளார்.  இதனால், 2 சமோசா ரூ.15க்கு பதிலாக ரூ.20க்கு விற்கப்பட்டு உள்ளது.

இதனை ஏற்க மறுத்து ஜெய்ஸ்வால் வாக்குவாதம் செய்துள்ளார்.  இதுபற்றி கடைக்காரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.  இதனை தொடர்ந்து போலீசார் ஜெய்ஸ்வாலிடம் விசாரித்து சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக மறுநாள் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெய்ஸ்வால் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்து உள்ளார்.  இதில், பலத்த காயமடைந்த அவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இறந்த மனைவியின் உடலை கணவரையே சுமக்க வைத்த அவலம்
21-ம் நூற்றாண்டில் நவீன உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக பெருமிதம் கொண்டிருந்தாலும், இன்னும் சில இடங்களில் மனிதர்கள் காட்டுமிராண்டி காலத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் நடந்துள்ளது.
2. ஆந்திராவில் சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 10 கி.மீ. சுமந்து சென்ற அவலம்
ஆந்திர பிரதேசத்தில் சரியான சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை கிராமத்தினர் 10 கி.மீ. தூரம் சுமந்து சென்றுள்ளனர்.