தேசிய செய்திகள்

தெலுங்கானா: வாகன சோதனையில் 3,650 கிலோ போதை பொருள் பறிமுதல் + "||" + Telangana: 3,650 kg of drugs seized during vehicle search

தெலுங்கானா: வாகன சோதனையில் 3,650 கிலோ போதை பொருள் பறிமுதல்

தெலுங்கானா:  வாகன சோதனையில் 3,650 கிலோ போதை பொருள் பறிமுதல்
தெலுங்கானாவில் நடந்த வாகன சோதனையில் 3,650 கிலோ போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஐதராபாத்,

தெலுங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.  போலீஸ் சூப்பிரெண்டு சுனில் தத் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்குரிய வகையிலான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு உள்ளனர்.

அதில் வந்தவர்கள் முரணான பதிலை தந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து, நடந்த சோதனையில் வாகனத்தில் மரிஜுவானா என்ற 3,650 கிலோ எடை கொண்ட போதை பொருள் கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  அவற்றின் மதிப்பு ரூ.7.30 கோடி என கூறப்படுகிறது.

இதனையடுத்து 2 லாரிகளையும் போலீசார் சோதனையிட்டு போதை பொருட்களை பறிமுதல் செய்து, வாகனங்களையும் கைப்பற்றி உள்ளனர்.  அந்த வாகனங்களில் இருந்த 4 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து முடங்கியது.  எனினும், சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.  இதனை பயன்படுத்தி, ஆயுதம், தங்கம் போன்ற பிற கடத்தல் சம்பவங்களை போல் நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான படகு ஒன்று நின்றது.
2. சத்தீஷ்கார் 10 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்
சத்தீஷ்காரில் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து உள்ளனர்.
3. ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
4. இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல்
இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருளை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்தனர்.
5. காஷ்மீரில் போலீசார் சோதனையில் ஒருவர் கைது; சீன எறிகுண்டுகள் பறிமுதல்
காஷ்மீரில் போலீசார் மற்றும் ராணுவ கூட்டு நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டு சீன எறிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.