இந்தியாவில் 43,509 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி


இந்தியாவில் 43,509 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
x
தினத்தந்தி 29 July 2021 4:24 AM GMT (Updated: 2021-07-29T09:54:35+05:30)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிர பாதிப்புகள் சற்று குறைந்து உள்ளன.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்றைய பாதிப்புகளை விட (43,654) சற்று குறைவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 38,465 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து ஓராயிரத்து 612 ஆக உயர்ந்து உள்ளது.  இது நேற்று 3 கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 147 ஆக இருந்தது.

இதனால், குணமடைந்தோர் விகிதம் 97.38% ஆக உள்ளது.  கொரோனா பாதிப்புகளுக்கு 4 லட்சத்து 3 ஆயிரத்து 840 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.Next Story