தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவுக்கு மத்திய அரசின் 6 நபர் நிபுணர் குழு பயணம் + "||" + Corona vulnerability increase: Central Government 6 person expert team visits Kerala

கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவுக்கு மத்திய அரசின் 6 நபர் நிபுணர் குழு பயணம்

கொரோனா பாதிப்பு உயர்வு:  கேரளாவுக்கு மத்திய அரசின் 6 நபர் நிபுணர் குழு பயணம்
கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு செல்கிறது.


திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,056 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.  இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,27,301 ஆக அதிகரித்துள்ளது.  131 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 16,457 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17,761 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 31,60,804 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,49,534 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் இன்னும் குறையவில்லை.  தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்வடைந்து வருகிறது.  இதனை முன்னிட்டு கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதன்படி, வருகிற 31ந்தேதி மற்றும் ஆகஸ்டு 1ந்தேதி ஆகிய 2 நாட்கள் இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு பயணம் மேற்கொள்கிறது.  இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று கூறும்போது, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் தலைமையிலான 6 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை கேரளாவுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். 

கேரளாவில் தொடர்ந்து அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.  அதனால், கொரோனா மேலாண்மைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில் இந்த குழு செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார்.
2. விநாயகர் சதுர்த்தியையொட்டி 576 சிறப்பு பஸ்கள் இயக்கம் சென்னையில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் வெளியூர் பயணம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து 576 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் வெளியூர் புறப்பட்டு சென்றதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
3. ராகுல் காந்தி இன்று ஜம்மு பயணம்: மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம்!
ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று ஜம்மு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
4. ரஷியாவில் அஜித் பைக் பயணம்
அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிகட்ட காட்சிகளை படமாக்க படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு ரஷியா சென்றனர்.
5. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.