தேசிய செய்திகள்

பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட் + "||" + FPJ Legal: Supreme Court to hear next week plea of journalists N Ram, Sashi Kumar seeking inquiry on Pegasus issue

பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்

பெகாசஸ் உளவு  விவகார மனுக்கள் மீது  ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் முதல்வாரத்தில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுடெல்லி

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ உளவுச் செயலியின் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெளியான முதல் 300 பேர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

பெகாசஸ் செல்போன் உளவு விவாகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. செல்போன் ஒட்டு கேட்பு சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல் என்றும், மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தன. இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று ஏற்கனவே கேரள மாநில எம்.பி. எம்.எல்.சர்மா உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் பெகாசஸ் உளவு  விவகாரம்  தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் முதல்வாரத்தில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது; ராகுல் காந்தி
புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடிக்கு எதிராக எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2. மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை; காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
3. பவானிபூர் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு
அரசியல் நன்றியுணர்வை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளிக்காட்டவில்லை என்று மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
4. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது: டி.கே.சிவக்குமார்
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது என்றும், இதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
5. அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி; ராகுல்காந்தி கண்டனம்
அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.