கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என நிபுணர் குழு எச்சரிக்கை


கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என நிபுணர் குழு எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 July 2021 9:28 PM GMT (Updated: 2021-07-31T02:58:48+05:30)

கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என நிபுணர்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் 50 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 48 மணி நேரத்தில் 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தினமும் 22 ஆயிரத்தை தாண்டி பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என நிபுணர்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் 50 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளது.

ஆதலால் தடுப்பூசி போடுவதை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். இனி வரும் 3 வார காலம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்ப்பதுடன், சமூக இடைவெளி காத்து எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story